top of page

8 results found with an empty search

  • ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமலேயே கோடீஸ்வரர் ஆகலாம்.. எடெல்வைஸ் அறிமுகப்படுத்திய ரூ.100 சேமிப்புத் திட்டம்!

    எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட், நாட்டின் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT) அடிப்படையிலான குறியீட்டு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'எடெல்வைஸ் நிஃப்டி REITs & ரியாலிட்டி இன்டெக்ஸ் ஃபண்ட்' எனப்படும் இந்த புதிய நிதித் திட்டம், தற்போது சந்தா செலுத்துவதற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்திய முதலீட்டாளர்களுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது எப்போதுமே ஒரு முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இருப்பினும், பெரிய பட்ஜெட்டுகள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணப் பணிகள் போன்ற காரணிகளால் அனைவரும் இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கின்றனர். இந்தச் சவாலை எளிதாக்கும் வகையில், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் , நாட்டின் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT) அடிப்படையிலான குறியீட்டு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 'எடெல்வைஸ் நிஃப்டி REITs & ரியாலிட்டி இன்டெக்ஸ் ஃபண்ட்' எனப்படும் இந்த நிதித் திட்டத்தில் சந்தா செலுத்தத் தொடங்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். வெறும் ரூ. 100 உடன் ரியல் எஸ்டேட் முதலீட்டு வாய்ப்பு இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை, இதை எளிதில் அணுக முடிவதே ஆகும். பொதுவாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும் நிலையில், இந்த இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்களை வெறும் ரூ.100-இல் தொடங்க அனுமதிக்கிறது. அடுத்தடுத்த முதலீடுகளை ரூ.1-இன் மடங்குகளில் செய்யலாம். இது நிஃப்டி REITS & ரியாலிட்டி டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸை (TRI) நேரடியாகக் கண்காணிக்கும் ஒரு ஓப்பன்-எண்டட் பாசிவ் ஃபண்ட் ஆகும். ஃபண்ட் மேலாளர்களான பாரத் லஹோதி மற்றும் மான்சி கங்கோத்ரா ஆகியோர் இந்தத் திட்டத்தை நிர்வகிக்கின்றனர். கண்காணிப்புப் பிழைகளைத் தவிர, ஃபண்டின் செயல்திறன் முற்றிலும் அதன் அடிப்படைக் குறியீட்டைச் சார்ந்தே இருக்கும். எங்கெல்லாம் முதலீடு செய்றாங்க? இந்த நிதியின் முதலீட்டுத் தொகுப்பில், அதன் குறியீட்டுப் பங்குகளில் 60 சதவீதம் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளிலும் (REITs), மீதமுள்ள 40 சதவீதம் பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளிலும் அடங்கியுள்ளது. எதிர்காலத்தில், இந்தியச் சந்தையில் பட்டியலிடப்பட்ட REIT-களின் வீச்சு விரிவடையும்போது, ​​REIT-களுக்கான ஒதுக்கீடு 100 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். REIT-கள் பெரிய, உயர்தர வணிகச் சொத்துக்களிலிருந்து வழக்கமான வருமானத்தை வழங்குகின்றன, அதேசமயம் ரியல் எஸ்டேட் பங்குகள் நீண்ட கால மூலதன மதிப்பு உயர்வின் நன்மையை அளிக்கின்றன. CEO ராதிகா குப்தா கூறியது என்ன? எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ராதிகா குப்தா கூறுகையில், "இந்திய முதலீட்டாளர்களுக்கு ரியல் எஸ்டேட் நீண்ட காலமாக ஒரு முக்கியமான முதலீட்டு வாய்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதிக மூலதனத் தேவைகள் மற்றும் எண்ணற்ற சிக்கல்கள் காரணமாக இதில் முதலீடு செய்வது கடினமாக இருந்தது. REIT-கள், ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான கட்டமைப்பின் மூலம், சாதாரண முதலீட்டாளர்கள் தரமான, வருமானம் ஈட்டும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை அணுகுவதை எளிதாக்கியுள்ளன. இந்தியாவின் முதல் REIT அடிப்படையிலான இன்டெக்ஸ் ஃபண்ட் மூலம், இந்தத் துறையில் பல்வகை முதலீட்டை முதலீட்டாளர்களுக்கு நாங்கள் இன்னும் எளிதாக்குகிறோம். இது குறைந்த செலவிலான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு முதலீட்டு வாய்ப்பாகும். இந்த ஃபண்ட் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தி, முதலீட்டாளர்கள் மேலும் பல்வகைப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்க உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." எனக் கூறியுள்ளார். முதலீடு தொடர்பான இலவச ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்

  • முதல் காலாண்டிலேயே ரூ.518 கோடி லாபம் ஈட்டிய டாடாவின் ட்ரெண்ட்.. உயர்வில் பங்குகள்!

    டாடா குழுமத்தின் சில்லறை விற்பனை நிறுவனமான ட்ரென்ட் லிமிடெட், ஜூன் 30, 2026 அன்று முடிவடைந்த முதல் காலாண்டிற்கான தனது ஒருங்கிணைந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரித்து ரூ. 518.07 கோடியாக உயர்ந்துள்ளது. டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பெருநிறுவனமான ட்ரென்ட் லிமிடெட், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான தனது ஒருங்கிணைந்த நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஆகஸ்ட் 6, 2026 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில், ஜூன் 30, 2026 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடு வலுவாக இருந்தது, நிகர லாபம் மற்றும் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது. மேலும், நிர்வாக மாற்றங்கள் மற்றும் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் சுழற்சி தொடர்பான பல முக்கிய முடிவுகளையும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு எடுத்தது. வருவாயுடன் சேர்ந்து நிகர லாபமும் அதிகரித்தது ஒருங்கிணைந்த முடிவுகளின்படி, ஜூன் 30, 2026 அன்று முடிவடைந்த முதல் காலாண்டில், ட்ரென்ட் லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.98% அல்லது ஏறக்குறைய 22% அதிகரித்து ரூ.518.07 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.424.70 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2026 அன்று முடிவடைந்த முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் ரூ.413.10 கோடியிலிருந்து 25.41% அதிகரித்துள்ளது. நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பான விவரங்களை அறிய இப்போதே தொடர்பு கொள்ளுங்கள். ஸ்ரீ காமாட்சி அம்மன் முதலீட்டு அறக்கட்டளை நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலமான வருவாயும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முதல் காலாண்டில், டிரென்ட்டின் செயல்பாடுகள் மூலமான வருவாய் 17.84% அதிகரித்து ரூ. 5,754.71 கோடியாக உயர்ந்துள்ளது. இது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ. 4,883.48 கோடியாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானமும் ரூ. 4,924.07 கோடியிலிருந்து ரூ. 5,784.54 கோடியாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ. 691.84 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 564.69 கோடியாக இருந்தது. டிரெண்ட் பங்கு விலை நிலவரம் இன்று பாசிட்டிவ்வான காலாண்டு முடிவுகளால் டிரெண்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1.88% உயர்வுடன் ரூ.3,187.90 ஆக வர்த்தகமாகி வருகிறது. பங்கு விலை கடந்த 5 நாட்களில் 6 சதவீதமும், கடந்த 6 மாதத்தில் 16.24% உயர்வையும், YTD அடிப்படையில் 11.27%, 5 ஆண்டுகளில் 420.53% வருமானமும் கொடுத்துள்ளது.

  • Warren Buffett: சராசரி ஆண்டு வருமானம் 19% - ஆனால் எப்படி ரூ.13,83,300 கோடி செல்வம் உருவாக்கினார்?

    உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படும் 92 வயதான வாரன் பஃபெட் குறித்து மக்கள் அதிகம் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், அவரின் அவரின் நிகர செல்வ மதிப்பு $145.1 பில்லியன் அதாவது சுமார் ரூ.13,83,300 கோடி ஆகும். அவருடைய வருடாந்திர சராசரி முதலீட்டு வருமானம் சுமார் 19% மட்டுமே. இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. அப்படியிருக்க அவர் எப்படி உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக ஆனார்? அந்தக் கேள்விக்கான பதில், கூட்டு வளர்ச்சி (Compound Growth) என்ற ஒரே சொல்லில் அடங்கியுள்ளது. அதிக வருமானம் மட்டுமல்ல, அந்த வருமானத்தை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து மீண்டும் முதலீடு செய்வதே மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் ரகசியம். வாரன் பஃபெட்டின் முதலீட்டுப் பயணம்: வாரன் பஃபெட் மிகவும் இளம் வயதிலேயே பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்கினார். அவர் 11 வயதில் தனது முதல் பங்குகளை வாங்கினார். பின்னர் அவர் தனது வருமானத்தைச் செலவழிக்காமல் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருந்தார். 1965 முதல் அவர் நடத்தி வந்த பெர்க்ஷயர் ஹாதவே நிறுவனத்தின் மதிப்பு பல தசாப்தங்களாக சராசரியாக ஆண்டுக்கு சுமார் 19% அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த 19% வளர்ச்சி ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் அல்ல; சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துள்ளது. 19% வருமானம் எப்படி பெரும் செல்வமாக மாறுகிறது? முதலீட்டில் மிக முக்கியமானது “எவ்வளவு சம்பாதிக்கிறோம்?” என்பதல்ல; “எவ்வளவு காலம் (Time) சம்பாதிக்கிறோம்?” என்பதுதான். ஒரு தொகையை ஆண்டுக்கு 19% வருமானத்தில் தொடர்ந்து வளர விட்டால், சில ஆண்டுகளுக்குப் பிறகு வருமானம், ஆரம்ப முதலீட்டை விட பெரியதாக மாறத் தொடங்கும். உதாரணம்: ஒருவர் ரூ.1,00,000 முதலீடு செய்து, ஆண்டுக்கு 19% வருமானம் பெற்று, அதைத் தொடர்ந்து மீண்டும் முதலீடு செய்தால் என்ன ஆகும்? அட்டவணை 1 பார்த்தால் எளிதில் விளங்கும். அட்டவணை 1: ரூ. 1 லட்சம், ஆண்டுக்கு 19% வருமானத்தில் பெருகுவது இப்படிதான்..! அட்டவணை 1-ஐ பார்த்தால் ஒரு முக்கியமான உண்மை புரியும். முதல் 20 ஆண்டுகளில் வளர்ச்சி சாதாரணமாகத் தெரியும். ஆனால் 40, 50, 60 ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சி வெடித்துச் செல்லும். இதுவே கூட்டு வளர்ச்சியின் சக்தி. கூட்டு வளர்ச்சி என்றால் என்ன? ஓர் ஆண்டில் கிடைக்கும் லாபத்தை எடுத்துச் செலவழிக்காமல், அதையும் அடுத்த ஆண்டிற்கான முதலீட்டில் சேர்ப்பதுதான் கூட்டு வளர்ச்சி ஆகும். உதாரணமாக, ரூ.1,00,000 முதலீட்டில் முதல் ஆண்டில் ரூ.19,000 லாபம் கிடைத்தால், அடுத்த ஆண்டு ரூ.1,19,000 மீது வருமானம் கிடைக்கும். அதற்குப் பிறகு வரும் ஆண்டில் இன்னும் பெரிய தொகையின் மீது வருமானம் கிடைக்கும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் லாபத்தின் மீது லாபம் கிடைக்கத் தொடங்கும். ஏன் காலம் மிகவும் முக்கியம்? வாரன் பஃபெட்டின் செல்வத்தில் பெரும்பாலான பகுதி அவர் வயதான பிறகுதான் உருவானது. பல ஆய்வுகள் கூறுவதாவது, அவரது மொத்த செல்வத்தின் பெரும்பகுதி 60 வயதிற்குப் பிறகு உருவானது. இதன் பொருள், அவர் புத்திசாலியாக முதலீடு செய்தது மட்டுமல்ல; மிக நீண்ட காலம் முதலீட்டைத் தொடர்ந்தார் என்பதுதான் முக்கிய காரணம். லாபத்தை எடுத்துக் கொள்ளாத பழக்கம் பல முதலீட்டாளர்கள் லாபம் கிடைத்தவுடன் அதை எடுத்துச் செலவழித்து விடுகிறார்கள். ஆனால் வாரன் பஃபெட் தனது முதலீட்டு லாபத்தின் பெரும்பகுதியை மீண்டும் மீண்டும் முதலீடு செய்தார். இதனால் அவருடைய முதலீட்டு இயந்திரம் ஒவ்வொரு ஆண்டும் பெரியதாக மாறியது. சிறிய விதை, பெரிய மரமாக மாறியதுபோல், சிறிய முதலீடு மிகப்பெரிய சொத்தாக மாறியது. கூட்டு வளர்ச்சி என்றால் என்ன? ஓர் ஆண்டில் கிடைக்கும் லாபத்தை எடுத்துச் செலவழிக்காமல், அதையும் அடுத்த ஆண்டிற்கான முதலீட்டில் சேர்ப்பதுதான் கூட்டு வளர்ச்சி ஆகும். உதாரணமாக, ரூ.1,00,000 முதலீட்டில் முதல் ஆண்டில் ரூ.19,000 லாபம் கிடைத்தால், அடுத்த ஆண்டு ரூ.1,19,000 மீது வருமானம் கிடைக்கும். அதற்குப் பிறகு வரும் ஆண்டில் இன்னும் பெரிய தொகையின் மீது வருமானம் கிடைக்கும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் லாபத்தின் மீது லாபம் கிடைக்கத் தொடங்கும். ஏன் காலம் மிகவும் முக்கியம்? வாரன் பஃபெட்டின் செல்வத்தில் பெரும்பாலான பகுதி அவர் வயதான பிறகுதான் உருவானது. பல ஆய்வுகள் கூறுவதாவது, அவரது மொத்த செல்வத்தின் பெரும்பகுதி 60 வயதிற்குப் பிறகு உருவானது. இதன் பொருள், அவர் புத்திசாலியாக முதலீடு செய்தது மட்டுமல்ல; மிக நீண்ட காலம் முதலீட்டைத் தொடர்ந்தார் என்பதுதான் முக்கிய காரணம். லாபத்தை எடுத்துக் கொள்ளாத பழக்கம் பல முதலீட்டாளர்கள் லாபம் கிடைத்தவுடன் அதை எடுத்துச் செலவழித்து விடுகிறார்கள். ஆனால் வாரன் பஃபெட் தனது முதலீட்டு லாபத்தின் பெரும்பகுதியை மீண்டும் மீண்டும் முதலீடு செய்தார். இதனால் அவருடைய முதலீட்டு இயந்திரம் ஒவ்வொரு ஆண்டும் பெரியதாக மாறியது. சிறிய விதை, பெரிய மரமாக மாறியதுபோல், சிறிய முதலீடு மிகப்பெரிய சொத்தாக மாறியது. வாரன் பஃபெட்டின் வெற்றியின் உண்மையான ரகசியம்: அவரது வெற்றிக்குக் காரணம் ஒரு அதிசயமான 100% அல்லது 200% வருடாந்திர வருமானம் அல்ல. அதற்குப் பதிலாக, ஒழுங்கான முதலீடு, தரமான நிறுவனங்களைத் தேர்வு செய்தல், தேவையற்ற வாங்குதல்–விற்பனையைத் தவிர்த்தல், மற்றும் பல தசாப்தங்களாக முதலீட்டைத் தொடர்தல் ஆகியவைதான் முக்கிய காரணங்கள். சாதாரண முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: வாரன் பஃபெட்டின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு முதலீட்டாளரும் சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் முதலீட்டை விரைவாகத் தொடங்க வேண்டும். தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். கிடைக்கும் வருமானத்தை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். குறுகிய கால ஏற்ற இறக்கங்களால் பயப்படக் கூடாது. நல்ல தரமான முதலீடுகளை நீண்ட காலம் வைத்திருக்க வேண்டும். பொறுமை என்பது முதலீட்டின் மிகப்பெரிய பலம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வாரன் பஃபெட் ஆண்டுக்குச் சராசரியாக 19% மட்டுமே சம்பாதித்தார். ஆனால் அந்த 19% வருமானத்தை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கூட்டு வளர்ச்சியில் விட முடிந்தது. அதனால்தான் அவரது செல்வம் இன்று $145.1 பில்லியன், அதாவது சுமார் ரூ.13,83,300 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. (13 லட்சத்து 83 ஆயிரம் கோடி) எனவே, முதலீட்டில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்குவது அதிக வருமானம் மட்டுமல்ல; நீண்ட காலம், ஒழுங்காக, கூட்டு வளர்ச்சியின் சக்தியைப் பயன்படுத்துவதுதான் உண்மையான ரகசியம். சிறிய தொகையில் தொடங்கினாலும், போதுமான காலம் மற்றும் பொறுமை இருந்தால், கூட்டு வளர்ச்சி ஒரு சாதாரண முதலீட்டாளரையும் குறிப்பிடத்தக்கச் செல்வத்தை உருவாக்கும் பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்கள் முதலீட்டு பயனத்தை தொடர இன்றே இணைந்திடுங்கள். ரெஜிஸ்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

  • Home Loan Guide: SIP முதலீடு மூலம் வீட்டுக் கடனை அடைப்பது புத்திசாலித்தனமா? ரிஸ்க்கான முடிவா?

    மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP)-ல் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீட்டுக் கடனை மொத்தமாக அடைக்கும் உத்தி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. வீட்டுக் கடன் வாங்குவது மிக எளிது. ஆனால் அதை நீண்டகாலம் செலுத்துவது என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய நிதிச் சுமையாகும், பலரும் கடனை விரைவாக அடைக்க, மாதந்தோறும் கிடைக்கும் உபரி பணத்தை முன்கூட்டியே கடன் கணக்கில் செலுத்தி விடுகிறார்கள். ஆனால் அதை மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP)-ல் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வீட்டுக் கடனை மொத்தமாக அடைக்கும் உத்தி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது பார்ப்பதற்கு லாபகரமானதாகத் தோன்றினாலும், இதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன? இந்த உத்தியைத் தேர்வு செய்வது என்பது லாபகரமானதா? இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம் எது சாதகம்? வீட்டுக் கடனை அடைப்பதில் ப்ரீ பேமெண்ட் எனப்படும் முன்கூட்டியே கடனை அடைக்கும் முறையைத்தான், பெரும்பாலான நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது வட்டியைப் பெரிய அளவில் மிச்சப்படுத்த உதவும். இது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்தவும் உதவும். விரைவில் கடனை அடைக்கவும் உதவிகரமாக இருக்கும். அப்படி இருக்கையில் அதனுடன் ஒப்பிடும்போது எஸ் ஐ பி மூலம் செலுத்துவது என்பது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். எது ஸ்மார்ட்டான வழி என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியான பதிவொன்றில், மாத தவணையை எஸ்.ஐ.பி-ஐ பயன்படுத்தி எப்படித் திட்டமிடலாம் என்பது குறித்துக் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தியானது புதிதாக வீட்டுக் கடன் பெறத் திட்டமிடுபவர்களுக்கும் அல்லது ஏற்கனவே கடன் பெற்றுள்ளவர்களுக்கும் நன்றாகப் பொருந்தும். உங்களிடம் ஏற்கனவே கடன் இருந்தால், அதைச் செயல்படுத்த உங்கள் கடனை மறு நிதியுதவி செய்து தவணை காலத்தை நீட்டிக்கலாம். நீங்கள் புதிய வீட்டுக் கடன் பெற விரும்பினால், நீண்ட தவணை காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் வீட்டுக் கடன் மாத தவணையைக் குறைக்க உதவும். இதன் மூலம் மீதமுள்ள சேமிப்பு தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-ல் முதலீடு செய்ய முடியும். 15 ஆண்டு Vs 20 ஆண்டு: கடன் உதாரணமாக நீங்கள் ஆகஸ்ட் 2005ல் 8.45% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளுக்கு 80 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், உங்கள் இ.எம்.ஐ 78,545 ரூபாயாக இருந்திருக்கும். 15 ஆண்டுக்கால கடன் தவணை காலத்தில், நீங்கள் வட்டியாக மட்டும் சுமார் 61 லட்சத்தைச் செலுத்தியிருப்பீர்கள். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் தவணை காலத்தில், நீங்கள் வட்டியாக மட்டும் சுமார் 61 லட்சத்தைச் செலுத்தியிருப்பீர்கள். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடனை முடிக்க அசல் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலுத்தியிருப்பீர்கள். அதே 80 லட்சம் ரூபாய்க் கடன் தொகையை எடுத்துக் கொண்டு, அதன் தவணை காலத்தில் 20 ஆண்டுகளாக நீட்டிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் மாதத் தவணை 69,173 ரூபாயாக ஆக குறையும். எனினும் கடன் காலத்தில் நீங்கள் சுமார் 25 லட்சம் கூடுதலாக வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும் (மொத்த வட்டி ரூ.86,01,496). ஆனால் இங்கே தான் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் உள்ளது. 15 ஆண்டு Vs 20 ஆண்டு: எஸ்.ஐ.பி மேற்கண்ட இரண்டு மாத தவணைகளுக்கான வித்தியாச தொகையை 9,372 ரூபாயாக, நிஃப்டி 50 குறியீட்டைப் பின்பற்றும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்தால் என்னவாகும். 2005 – 2020 வரையிலான 15 ஆண்டுகள் காலகட்டத்தில், நிஃப்டி 50 TRI குறியீடானது ஆண்டுக்குச் சராசரியாக 10.12% வளர்ச்சி கண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் மாதம் 9,372 ரூபாயாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், அந்த தொகையானது 38,25,361 ரூபாயாக வளர்ந்திருக்கும். அதேசமயம் மீதமுள்ள வீட்டுக் கடன் நிலுவைத் தொகை 33,75,532 ரூபாயாக இருந்திருக்கும். கடனை முழுமையாக அடைத்து விட்டாலும், உங்களிடம் சுமார் 4.5 லட்சம் மிச்சம் ஆகியிருக்கும். இந்த எஸ்.ஐ.பி தொகையை 20 ஆண்டுகளுக்குத் தொடரும்போது 96 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். இந்த திட்டத்தில் உள்ள முக்கிய ரிஸ்க்குகள்! சந்தை அபாயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை; இந்த உத்தியின் மிகப்பெரிய பின்னடைவு என்னவென்றால், உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை விட உங்கள் எஸ் ஐ பி முதலீட்டின் லாபம் வேகமாக வளர்ச்சியடையவில்லை என்றால் இந்த திட்டம் பலனளிக்காது. லாபத்திற்கு உத்தரவாதம் இல்லை: பங்குச் சந்தையில் எப்போதும் உறுதியான லாபம் கிடைக்கும் என்று கூற முடியாது. கடந்த காலத்தில் கிடைத்த லாபம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சந்தை மற்றும் வட்டி விகித மோதல்: இந்த திட்டத்தில் சந்தை அபாயமும் உள்ளது. முதலீட்டு லாபமானது கடன் வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்காமல் போக வாய்ப்புள்ளது. வரிச் சலுகைகள் தாக்கம் வீட்டுக் கடன் மூலம் வரிச் சலுகைகளைப் பெறக் கூடியவர்களுக்கு இந்த உத்தி மேலும் சாதகமாக மாறலாம். ஏனென்றால் அவர்களின் நிகர கடன் செலவு குறைவாக இருக்கும். பழைய வரி முறை: பிரிவு 80சி -ன் மூலம் அசல் தொகைக்கும், பிரிவு 24ன் கீழ் வட்டிக்கும் வரி விலக்கு கிடைக்கும். இதை ஒருங்கிணைந்து பெரும்போது செலவும் பெரிய அளவில் குறையும். புதிய வரி முறை: புதிய வரி முறையில் உங்கள் வீடு வாடகைக்கு விடப்பட்ட வீடாக இருந்தால், வீட்டுக் கடன் வட்டி செலுத்துதலில் 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். தொடர்ச்சியான முதலீட்டின் அவசியம் தொடர்ச்சியான முதலீடு மிகவும் அவசியம். நீங்கள் சரியான முறையில் முதலீடு செய்யத் தவறினால், உங்களால் எதிர்பார்க்கும் லாபத்தைப் பெற முடியாது. கடனையும் முழுமையாக அடைக்க முடியாது. ஆக சீரான முதலீடும், நேர்த்தியான திட்டமிடலும் மிக அவசியம்.

  • முதலீட்டாளர்களுக்கு அள்ளி கொடுக்கும் Indo-MIM, ஒரே நாளில் 45% லாபம் வழங்கிய ஐபிஒ

    உலகிலேயே மிகப்பெரிய MIM உற்பத்தித் திறனைக் கொண்டு 'மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங்' துறையில் Indo-MIM நிறுவனம் உலக அளவில் முன்னணியில் இருப்பதாகவும், பல உலகளாவிய அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு விருப்பமான விநியோகஸ்தராகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். ஓஜாவின் கூற்றுப்படி, உலகளாவிய MIM சந்தையானது 2026-ல் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2035-க்குள் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் Indo-MIM நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வலுவான அறிமுகத்தைக் கண்டன. இப்பங்குகள் ரூ. 485 என்ற வெளியீட்டு விலையை விட 45 சதவீதம் கூடுதல் விலையில் பட்டியலிடப்பட்டன. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIBs) மற்றும் அதிக நிகர மதிப்புள்ள முதலீட்டாளர்களிடமிருந்து இருந்த வலுவான தேவை மற்றும் உலகளாவிய மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் துறையில் இந்நிறுவனம் வகிக்கும் முன்னிலை நிலை ஆகியவை இந்தச் சிறப்பான பட்டியலிடலுக்குக் காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். BSE சந்தையில் இப்பங்கு வெளியீட்டு விலையை விட 44.94 சதவீதம் உயர்ந்து ரூ. 703-க்கு பட்டியலிடப்பட்டது. பின்னர் அது 49.51 சதவீதம் உயர்ந்து ரூ. 725.15-ஐ எட்டியது. NSE சந்தையில் இப்பங்குகள் ரூ. 700-க்கு அறிமுகமாகி 44.32 சதவீத லாபத்தைப் பதிவு செய்தன. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35,132.87 கோடியாக இருந்தது. பட்டியலிடல் குறித்து கருத்து தெரிவித்த Swastika Investmart Ltd-இன் செல்வ மேலாண்மைப் பிரிவுத் தலைவர் ஷிவானி நியாதி, வலுவான அறிமுகத்திற்குப் பிறகு இப்பங்கு அதன் நியாயமான மதிப்பை விட அதிக விலையில் வர்த்தகம் செய்யப்படுவதாகக் கூறினார். உலகிலேயே மிகப்பெரிய MIM உற்பத்தித் திறனைக் கொண்டு 'மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங்' துறையில் Indo-MIM நிறுவனம் உலக அளவில் முன்னணியில் இருப்பதாகவும், பல உலகளாவிய அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு விருப்பமான விநியோகஸ்தராகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். ஓஜாவின் கூற்றுப்படி, உலகளாவிய MIM சந்தையானது 2026-ல் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2035-க்குள் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் IPO, திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஏலத்தின் கடைசி நாளில் 72.34 மடங்குக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை வரம்பு ரூ. 461 முதல் ரூ. 485 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புதிய பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதியில் ரூ. 400 கோடியை, நிலுவையில் உள்ள சில கடன்களை முன்கூட்டியே செலுத்துவதற்கோ அல்லது திருப்பிச் செலுத்துவதற்கோ பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள நிதி பொதுவான நிறுவனத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். 1996-ல் தொடங்கப்பட்ட Indo-MIM நிறுவனம், மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் துல்லியமான பொறியியல் உதிரிபாகங்களைத் தயாரிப்பதோடு, முழுமையான உற்பத்தித் தீர்வுகளையும் வழங்கி வருகிறது.

  • மாதம் ரூ.15 லட்சம் வருமானம்... அம்மிக்கல்லை பிராண்டாக மாற்றிய சௌந்தர்யலட்சுமி!

    ‘‘அமெரிக்கால வாழுற இந்தியர்கள்கிட்ட நம்ம ஊர் அம்மி, இஞ்சி-பூண்டு தட்டுற உரல், ஆட்டுக்கல்லு மாதிரியான பாரம்பர்ய சமையல் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்...'' - ஒருகாலத்தில் மிக்ஸி வந்ததால் மறைந்து விடும் என்று நினைக்கப்பட்ட அம்மிக்கல், ஆட்டுக்கல், உலக்கை... இன்று மீண்டும் சமையலறை களில் இடம்பிடித்திருக்கின்றன. இது வெறும் பழைய சமையல் கருவிகளின் மறுவரவு அல்ல. பாரம்பர்யத்தையே புதிய தலைமுறைக்கான பிராண்டாக மாற்றிய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த செளந்தர்ய லட்சுமியின் வெற்றிக்கதை. கல்லூரியில் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றவர் செளந்தர்யலட்சுமி. அதை தவிர்த்துவிட்டு, 20,000 ரூபாய் முதலீட்டில் பிசினஸை தொடங்கி, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மூலம் இன்று மாதம் 12 லட்சம் வரை டேர்ன்ஓவர் செய்துவருகிறார். தன் வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். கிரானைட் தொழிலிலிருந்து..! “எங்க அப்பா பல வருஷமா கிரானைட் பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். சின்ன வயசுல இருந்தே அந்தத் தொழிலைப் பார்த்து வளர்ந்ததால, ஒருநாள் அதை நானும் எடுத்து நடத்தணும்னு ஆசைப் பட்டேன். படிப்பு முடிஞ்சதும் அப்பாவோட பிசினஸ்ல என்னையும் இணைச்சுக்கிட்டேன். ஆனா, எதிர்பாராத விதமா கொரோனா வந்து எங்களோட தொழில் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுருச்சு. ஈரோட்டுல எங்களுக்கு ஐந்து ஷோரூம்கள் இருந்துச்சு. கொரோனா காலத்துல விற்பனை சரிஞ்சதால, நஷ்டம் அதிகமாகி நாலு ஷோரூம்களை மூடுற நிலைமைக்கு வந்துட்டோம். அந்த இடைப்பட்ட காலத்துல எனக்குக் கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டேன். அங்க நான் பார்த்த சில விஷயங்கள்தான், இன்று நான் நடத்துற தொழிலோட அடித்தளமா மாறுச்சு’’ என்றவர், அதுபற்றி விவரித்தார். அமெரிக்காவில் பிறந்த ஐடியா! ‘‘அமெரிக்கால வாழுற இந்தியர்கள்கிட்ட நம்ம ஊர் அம்மி, இஞ்சி-பூண்டு தட்டுற உரல், ஆட்டுக்கல்லு மாதிரியான பாரம்பர்ய சமையல் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கிரானைட், மார்பிள்ஸ்ல அழகான வடிவமைப்புல செஞ்சு பயன்படுத்திட்டு இருந்தாங்க. அதைப் பார்த்தப்போ, ‘இத்தனை வருஷமா அப்பா கிரானைட் பிசினஸ்ல இருக்காரு... இந்த ஐடியா நமக்கு ஏன் தோணல?’னு நினைச்சேன். இந்தியா வந்ததும் அப்பாகிட்ட என் ஐடியாவைச் சொன்னேன். ‘நாம லாரி கணக்குல கிரானைட் விக்கிறவங்க. ஒரு கல்லு, ரெண்டு கல்லுனு வித்தா அதுல பெரிய லாபம் இருக்காது’னு அப்பா முதல்ல தயங்குனாரு” என்றவர், தான் களத்தில் இறங்கிய கதையைப் பகிர்ந்தார். 20,000 ரூபாயில் தொடங்கிய கனவு! “எனக்கு அந்த ஐடியாவை விட்டுட மனசே வரல. என்கிட்ட சேமிப்பா 20,000 ரூபாய் இருந்துச்சு. ‘இதையே முதலீடா வெச்சு ஆரம்பிச்சுப் பார்ப்போமே’னு முடிவு பண்ணேன். பொதுவா தரை, கட்டட வேலைகளுக்குப் பெரிய சைஸ் கற்கள்தான் தேவைப்படும். ஆனா, நான் செய்ய நினைச்சது சின்னச் சின்ன சமையல் பொருள்கள். அதனால குவாரிகள்ல உடைஞ்சு ஒதுக்கி வெச்சிருந்த கற்களே எனக்குப் போதுமானதா இருந்துச்சு. அந்தக் கற்களை வாங்கிட்டு, எங்க ஊர்ல அம்மி கொத்துறவங்க, ஆட்டுக்கல் செய்றவங்களைத் தேடிக் கண்டு பிடிச்சேன். அவங்ககிட்ட பத்து பீஸ்களை மட்டும் செஞ்சு வாங்குனேன். அதே நேரத்துல என் தோழி ஒருத்தவங்க ஒரு கண்காட்சியில ஸ்டால் போட்டிருந்தாங்க. ‘என்னோட பொருள்களையும் அங்க வெச்சுப் பார்ப்போமே’னு எடுத்துட்டுப் போனேன். நம்ப முடியாத மாதிரி, ரெண்டு நாள்ல பத்து பீஸ்களும் விற்று தீர்ந்துச்சு. ஸ்டால் முடியுறதுக்குள்ளேயே அடுத்தடுத்த ஆர்டர்களும் வர ஆரம்பிச்சிடுச்சு. ஸ்டால்ல கிடைச்ச பணத்தையே திரும்ப முதலீடா போட்டு, மறுபடியும் கற்கள் வாங்கிப் பொருள்கள் செஞ்சு விற்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல கோபிசெட்டிபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்ல இருந்துதான் ஆர்டர்கள் வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா பிசினஸும் வளர ஆரம்பிச்சுது. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல விற்பனை அதிகரிக்கல. புது வாடிக்கையாளர்களை அடையணும்னா, விளம்பரம் பண்ணியே ஆகணும்னு புரிஞ்சுது. பெரிய அளவுல விளம்பரம் பண்ண என்கிட்ட வாய்ப்பு இல்ல. அதனால, இன்ஸ்டாகிராம்லேயே ஒரு பிசினஸ் பக்கத்தை ஆரம்பிச்சு, வீடியோக்கள் எடுத்து பதிவிட ஆரம்பிச்சேன். அது என்னோட பொருளை இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்துச்சு” என்றவர் சந்தித்த சவால்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார். ஒரே ஆர்டர்... உடைந்த கனவுகள்! “ஆரம்பத்துல ‘இந்தப் பொண்ணு ஏதோ ஆட்டுக்கல், அம்மிக்கல் பண்ணுதுனு’ எல்லாரும் சாதாரணமாகாத் தான் பார்த்தாங்க. ஆனா, கொஞ்ச நாள்லேயே போட்டி அதிகமா கிடுச்சு. நான் விலையைக் கொஞ்சம் குறைச்சு, மார்ஜினைக் கம்மியா வெச்சு விற்றதால வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆரம்பிச்சாங்க. அதே நேரத்துல சிலருக்கு அது பிடிக்கல. எனக்குக் கிரானைட் கிடைக்கிறதைத் தடுக்கக்கூட முயற்சி பண்ணாங்க. அதையெல்லாம் சமாளிச்சுட்டு தொழிலைத் தொடர்ந்து நடத்தினேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கை யில மறக்க முடியாத ஒரு நாள் வந்துச்சு. ஒரு லட்சம் ரூபாய்க்கு பெரிய ஆர்டர் கிடைச்சது. ‘இதுதான் என் பிசினஸோட டர்னிங் பாயின்ட்’னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு வாரத்துக்குள்ள பொருள்களைத் தயாரிச்சு அனுப்பணும். அந்த நேரத்துலதான் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்துச்சு. அதுவரைக்கும் எனக்குப் பொருள் செஞ்சு கொடுத்த சிலர், ‘இனிமே எங்களால செய்ய முடியாது’னு கை விரிச்சுட்டாங்க. என்ன பண்றதுனே தெரியல.கிடைச்ச ஆர்டர் கையை விட்டுப் போகப்போகுதுனு நினைச்சேன். மறுநாள் கடைக்குப் போனப்போ, ‘கவலைப்படா தீங்கம்மா... முடிச்சிடலாம்’னு சொல்லி, எங்க நிறுவனத்துல வேலை செய்யுற அண்ணா நாலு பேரோட நின்னுட்டு இருந்தாரு. அந்தக் காட்சியை இன்னைக்கும் மறக்க முடியாது. அவங்க உதவியால இரவு பகலா வேலை பார்த்து, எப்படியோ ஆர்டரை முடிச்சு பார்சல் பண்ணி லாரியில அனுப்பி வெச்சோம். ஆனா, மறுநாளே வாடிக்கை யாளர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘நீங்க அனுப்புன பொருளெல்லாம் உடைஞ்சு வந்திருக்கு’னு சொன்னாங்க. வீடியோவும் அனுப்பியிருந் தாங்க. அந்த வீடியோவைப் பார்த்தப்போதான் தப்பு எங்க நடந்துச்சுனு புரிஞ்சுது. அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன ஆர்டர்கள்தான் வந்துட்டு இருந்துச்சு. அதனால வைக்கோல் வெச்சு பார்சல் பண்ணி, தெரிஞ்சவங்க மூலமா அனுப்புன தால எந்தப் பிரச்னையும் வரல. ஆனா, இவ்வளவு தூரம் லாரியில பயணம் பண்ணும்போது, பொருள்கள் ஒண்ணோட ஒண்ணு மோதி முழுவதும் சேதமாயிடுச்சு. அவ்வளவுதான், நானும் உடைஞ்சு போயிட்டேன். என் கனவுகளும். 5,000 ரூபாயில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸ்! பொருளை வாங்கிய வாடிக்கையாளர் சமூக வலை தளங்களில் எனக்கு எதிரா வீடியோ போட ஆரம்பிச்சாரு. வாடிக்கையாளர் கொடுத்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுக்கணும். வேலை பார்த்த வங்களுக்குக் கூலி கொடுக்கணும். மறுபடியும் கற்கள் வாங்கிப் பொருள் செய்யணும். ஒரே நேரத்துல ஏகப்பட்ட அழுத்தம். வீட்டுலயும், ‘போதும்... இனிமே இந்த பிசினஸ் வேண்டாம்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கட்டத்துல நானுமே அப்படித் தான் நினைச்சேன். ‘கஷ்டப்பட்டும் தோத்துட் டோமே’னு மனசுக்குள்ள ஓடிக் கிட்டே இருந்துச்சு. அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. வெளியில இருந்து பார்க்கும்போது பிசினஸ் ரொம்ப ஈஸியா தெரியும். ஆனா, அதுக்குப் பின்னாடி எவ்வளவு போராட்டம் இருக்குனு அந்த ஒரு சம்பவமே எனக்குக் கத்துக்கொடுத்துருச்சு. அந்த நேரத்துல எனக்கு ரெண்டு வழிதான் இருந்துச்சு. ஒண்ணு, ‘இவ்வளவுதான்’னு பிசினஸை அப்படியே நிறுத்திடணும். இல்ல, மறுபடியும் பூஜ்ஜியத்துல இருந்து ஆரம்பிக்கணும். நான் ரெண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் கடன் வாங்கி நஷ்டத்தைச் சமாளிச்சேன். வீட்டோட எதிர்ப்பையும் மீறி, கையில இருந்த 5,000 ரூபாயை முதலீடு பண்ணி, மறுபடியும் பிசினஸை ஆரம்பிச்சேன். ‘Stone and Soul’ பிராண்டை கட்டமைச்சேன். முதல்ல பாதுகாப்பா பார்சல் பண்ற முறையைக் கத்துக்கிட்டேன். அடுத்தது மார்க்கெட்டிங்ல முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிச்சேன். இன்ஸ்டாகிராம் பக்கத்துல தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டேன். இன்ஃப்ளூயன்சர்களோட கொலாபரேஷன் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ஆர்டர்கள் மீண்டும் வர ஆரம்பிச்சுச்சு. கடன்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தேன். கிடைச்ச லாபத்தை திரும்பவும் தொழில்லயே முதலீடு பண்ணேன். கிரானைட், மார்பிளில் அம்மி, ஆட்டுக்கல், பூஜை பொருள்கள் எனப் புதுப்புது பொருள்களை அறிமுகப் படுத்தினேன். இப்போ எங்ககிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் இருக்கு. 15 பேர் வேலைக்கு இருக்காங்க. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருள்களை அனுப்பிட்டு இருக்கோம். மாதம் 12 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் லட்சம் வரைக்கும் டர்ன்ஓவர் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கோம்’’ என்று புன்னகைக்கிறார் செளந்தர்யலட்சுமி. உடைந்த கற்களிலிருந்து ஒரு பிராண்டை உருவாக்கிய திருப்தி அந்தப் புன்னகையில் தெரிகிறது!

  • காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தால் விலை உயர்ந்த வேதாந்தா அலுமினியம் பங்கு

    ஜூன் காலாண்டில் வேதாந்தா அலுமினியம் தனது வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான அலுமினிய உற்பத்தியைப் பதிவு செய்தது. உற்பத்தி கடந்த ஆண்டை விட 5% மற்றும் முந்தைய காலாண்டை விட 3% அதிகரித்துள்ளது. வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திலிருந்து பிரிந்த பிறகு, ஒரு தனி நிறுவனமாக வேதாந்தா அலுமினியம் மெட்டல் லிமிடெட் தனது முடிவுகளை வெளியிட்ட முதல் காலாண்டு இதுவாகும். ஜூன் காலாண்டிற்கான வலுவான முடிவுகளைத் தொடர்ந்து, ஜூலை 30ம் தேதி அன்று நிறுவனத்தின் பங்குகள் அன்றைய குறைந்தபட்ச விலையிலிருந்து 3% வரை மீண்டு உயர்ந்தன. இக்காலாண்டில் வேதாந்தா அலுமினியத்தின் நிகர லாபம், முந்தைய மார்ச் காலாண்டில் இருந்த ரூ.4,207 கோடியிலிருந்து 33.8% அதிகரித்து ரூ. 5,629 கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலாண்டிற்கான வருவாய் ரூ.21,393 கோடியாக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 12% வளர்ச்சியாகும்.வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனொதுக்கீட்டிற்கு முந்தைய வருவாய் ரூ. 10,299 கோடியாக இருந்தது. இது முந்தைய காலாண்டின் ரூ. 8,352 கோடி என்ற அளவிலிருந்து 23.3% உயர்வாகும். அதேவேளையில், EBITDA வரம்பு மார்ச் மாதத்தில் இருந்த 43.68%-லிருந்து 48.14%-ஆக, அதாவது 4 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. ஜூன் காலாண்டில் வேதாந்தா அலுமினியம் தனது வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான அலுமினிய உற்பத்தியைப் பதிவு செய்தது. உற்பத்தி கடந்த ஆண்டை விட 5% மற்றும் முந்தைய காலாண்டை விட 3% அதிகரித்துள்ளது. அலுமினா (Alumina) உற்பத்தி கடந்த ஆண்டை விட 41% அதிகரித்தது. இருப்பினும், திட்டமிடப்படாத பணிநிறுத்தங்கள் காரணமாக முந்தைய காலாண்டை விட 6% சரிவைக் கண்டது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 14% மற்றும் முந்தைய காலாண்டை விட 4% அதிகரித்தது. LME அலுமினிய விலையில் ஏற்படும் ஒரு டன்னுக்கு $100 என்ற அளவிலான மாற்றம், நிறுவனத்தின் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 7% தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வேதாந்தா அலுமினியம் மெட்டல் பங்குகள் 1.3% உயர்ந்து ரூ. 444.1 என்ற விலையில் வர்த்தகமாகி வருகின்றன.

  • அதிரடி லாபம் தரும் பங்கில் முதலீட்டை உயர்த்திய ஆஷிஷ் கச்சோலியோ.. 200% மல்டிபேக்கர் வருமானம் கொடுத்திருக்கு!

    மின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இண்டோ எஸ்எம்சி நிறுவனம், தனது முதல் காலாண்டு வருவாயை 136% அதிகரித்து பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. இதன் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 200 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருந்தாலும், பிரபல முதலீட்டாளர் ஆஷிஷ் கச்சோலியா இந்நிறுவனத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் தனது பங்குகளை 3.03%-ஆக உயர்த்தியுள்ளார். மேலும், அவர் தனது ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பில் சில புதிய பங்குகளைச் சேர்த்தும், பலவீனமான பங்குகளில் தனது பங்களிப்பைக் குறைத்தும் புத்திசாலித்தனமாக மறுசீரமைத்துள்ளார். பிரபல ஸ்மால்கேப் முதலீட்டாளர் ஆஷிஷ் கச்சோலியா, தனது முதலீட்டுத் தொகுப்பில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். குறிப்பாக, 200%-க்கு மேல் விலை உயர்ந்தபோதிலும், இண்டோ எஸ்எம்சி ( Indo SMC ) நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையால் அதில் தனது பங்குகளை 3.03 சதவீதமாக அவர் உயர்த்தியுள்ளார். இண்டோ எஸ்எம்சி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி மின் உறைகள் மற்றும் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் இண்டோ எஸ்எம்சி நிறுவனம், தனது முதல் காலாண்டில் வருவாயை 136% அதிகரித்து ரூ. 88.12 கோடியாக மாற்றி சாதனை படைத்துள்ளது. இதன் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் 206% வரை உயர்ந்து, சந்தையில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்தகைய அதீத வளர்ச்சிக்குப் பிறகும், கச்சோலியா இந்நிறுவனத்தின் மீது கூடுதல் நம்பிக்கை வைத்து, புதிதாக 1.3 லட்சம் பங்குகளை வாங்கி தன் பங்கை 2.46%-லிருந்து 3.03%-ஆக மாற்றியுள்ளார். போர்ட்ஃபோலியோவில் இதர மாற்றங்கள் கச்சோலியா தனது ஒட்டுமொத்த முதலீடுகளையும் புத்திசாலித்தனமாக மறுசீரமைத்து வருகிறார். புதிய வரவு: ஜூன் காலாண்டில் 'ஏசியன் எனர்ஜி' பங்குகளை புதிதாக வாங்கியுள்ளார். பங்குகள் குறைப்பு: டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ், ஃபைனோடெக்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் வாசா டென்டிசிட்டி போன்ற சில நிறுவனங்களில் தனது பங்குகளைக் குறைத்துள்ளார். முழு வெளியேற்றம்: வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்ஜி ஃபின்சர்வ் போன்ற சில நிறுவனங்களில் இருந்து தனது முதலீட்டை முற்றிலுமாகத் திரும்பப் பெற்றுள்ளார். முன்னணி முதலீட்டாளர்களின் இத்தகைய நகர்வுகள், பங்குச் சந்தையில் புதிய முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன.

bottom of page