top of page

மருந்து விநியோகத்தில் மாஸ் காட்டும் எண்டெரோ ஹெல்த்கேர்!

Writer: yagasathriya24mana
yagasathriya24mana
Sep 2
3 min read

இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவ விநியோகத் துறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, உற்பத்தி யாளர்களுக்கும் சில்லறை விற்பனை யாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது எண்டெரோ ஹெல்த்கேர் (Entero Healthcare Solutions Limited: NSE Symbol: ENTERO: BSE Code: 544122).



ஹரியானா மாநிலத்தின் ஃபரிதா பாத் நகரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரில் தனது கார்ப்பரேட் அலுவலகத்தையும் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இந்திய மருத்துவ விநியோகச் சூழலில் அதிவேகமாகத் தனது செயல் பாடுகளை விரிவுபடுத்திய இந்நிறுவனம், பிப்ரவரி 16, 2024 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.


செயல்பட்டு வரும் வணிக பிரிவுகள்


இந்தியாவின் மூன்று முன்னணி மருத்துவ விநியோக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் இந்நிறுவனம், நாட்டின் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் விநியோகச் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முற்றிலும் பி2பி (Business-to-Business) நடைமுறை யைச் சார்ந்த இந்நிறுவனம் மருந்து மற்றும் மருத்துவ சாதன உற்பத்தி யாளர்களிடமிருந்து தயாரிப்புகளைப் பெற்று, அவற்றை மருத்துவமனைகள், சில்லறை மருந்தகங்கள், கிளினிக்குகள் மற்றும் இதர சுகாதார சேவை வழங்கு நர்களுக்கு விநியோகம் செய்கிறது.


பாரம்பரிய விநியோகஸ்தர்களைப் போல் இல்லாமல், இந்நிறுவனம் முறையான கையகப்படுத்துதல் (Systematic Acquisitions) உத்தியைக் கையாண்டு மிகக் குறுகிய காலத்தில் தேசிய அளவில் வேகமாக வளர்ந்து உள்ளது. இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் பிராந்திய அளவிலான மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனது நிறுவனத்துடன் இணைத்துக்கொள் வதன் மூலம் தனது புவியியல் எல்லை யையும், வாடிக்கையாளர் தளத்தையும் இந்நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளது. இதுவரை சுமார் 51 கையகப்படுத்து தல்களை நாடு முழுவதும் வெற்றிகர மாகச் செயல்படுத்தியுள்ளது.



தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

மருத்துவத் தயாரிப்புகளின் இறக்குமதி, மத்திய கிடங்கு பராமரிப்பு, மறு-விநியோகம் மற்றும் இறுதி உபயோகிப்பாளருக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் இறுதி நிலை வரையிலான விநியோகம் (Last-Mile Delivery) என ஒட்டுமொத்த விநியோக சேவைகளையும் வழங்குகிறது. மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல்வேறு வகையான மருத்துவ நுகர் பொருட்களை சில்லறை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் துல்லியமாக விநியோகம் செய்கிறது.

மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் போன்றவற்றையும் மேற்கொள்கிறது. இதற்காகப் பயிற்சி பெற்ற மருந்து விற்பனைப் பிரதிநிதிகளை களத்தில் இறக்கி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களிடம் தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்கிறது. மேலும், சில்லறை வர்த்தகர்களை ஒருங்கிணைப்பதற்கான பல்வேறு விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

இந்நிறுவனம் கையாளும் தயாரிப்புகள் என்று பார்த்தால் வழக்கமான மருந்துகள், ஊட்டச்சத்து தயாரிப்புகள் (Nutraceuticals), தடுப்பூசிகள் ஆகியவை அடங்கும். மேலும், இதய நோய் சிகிச்சை (Cardiology) மற்றும் எலும்பியல் (Orthopaedics) போன்ற மருத்துவத் துறைகளுக்கான சிறப்பு சாதனங்கள், ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட்டுகள் (Coronary Stents), எலும்பியல் சிகிச்சையில் உள்ளே வைக்கப்படும் இம்ப்ளான்டுகள் (Orthopaedic Implants)போன்ற நவீன மருத்துவக் சாதனங்களையும் இந்நிறுவனம் விநியோகிக் கிறது. இவற்றுடன், மருத்துவக் கையுறைகள் (Surgical Gloves), சிரிஞ்சுகள் (Syringes), ஊசிகள் (Needles) மற்றும் தையல் நூல்கள்(Sutures) போன்ற தினசரி மருத்துவமனை நுகர்பொருள்களையும் வழங்கி வருகிறது.


சொந்த பிராண்ட் தயாரிப்புகள்


விநியோகத் துறையில் தனது நிலையை வலுப்படுத் திக்கொள்வதற்காக, இந்நிறுவனம் எண்டெரோ சர்ஜிக்கல்ஸ் (Entero Surgicals) என்ற சொந்த பிராண்டின் கீழ் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இவற்றில் நோயாளி கண்காணிப்பு சாதனங்கள் (Monitoring Devices), நர்சிங் தயாரிப்புகள், மறுவாழ்வு உபகரணங்கள் (Rehabilitation Products) மற்றும் இதர மருத்துவ நுகர்பொருட்கள் அடங்கும்.


தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் டிஜிட்டல் தளங்கள்


எண்டெரோ நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அதன் பின்னால் உள்ள வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பே முக்கியக் காரணம். பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் புகாத விநியோகத் துறையில், தொழில்நுட்பத்தை ஒருமுக்கிய காரணியாக இந்நிறுவனம் மாற்றியுள்ளது. இது பயன்படுத்தும் முக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளைப் பார்க்கலாம்.

எண்டெரோ டைரக்ட் (Entero Direct): இது சில்லறை மருந்தகங்களுக்காக உருவாக்கப்பட்ட கிளவுட் அடிப்ப டையிலான மென்பொருள் சேவை (SaaS). இதன் மூலம் சில்லறை மருந்தகங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை கைப்பேசி செயலி அல்லது இணையதளம் வழியாக ஆர்டர் செய்ய முடியும். கிடங்குகளில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்த தகவல்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு நிகழ்நேரத்தில் (Real-Time Inventory Visibility) வழங்குகிறது. இதன் மூலம் ஆர்டர்களைப் பெறுதல் மற்றும் கண்காணித்தல், கட்டணங்களைச் செயல்படுத்துதல், காலாவதியான மருந்துகளைத் திரும்பப் பெறுதல் (Returns) மற்றும் வணிகப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் குறைகளைச் சரிபார்த்து அவற்றுக்குத் தீர்வு காணுதல் போன்ற தனது விநியோகச் செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.


எண்டெரோ சிஆர்எம் (Entero CRM):


வாடிக்கையாளர் உறவு மேலாண்மைக்கான இந்தத் தொழில்நுட்பம் மூலம் இந்நிறுவனத்தின் அழைப்பு மையப் பணியாளர் கள் (Call Centre Executives) வாடிக்கையாளரின் கடந்த கால கொள்முதல் வரலாறு, நிலுவைத் தொகைகள் போன்ற விவரங்களை உடனடியாக அறிந்து, அவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடிகிறது.


எண்டெரோ ஈஆர்பி (Entero ERP):


இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கிடங்கு செயல்பாடுகளையும், ஆர்டர் செயலாக்கங்களையும் நிகழ்நேரத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பாக இது செயல்படுகிறது.


டெக்டிக் (Teqtic):


இது தரவு பகுப்பாய்வு (Data Analytics) மற்றும் வணிக நுண்ணறிவு (Business Intelligence) அமைப்பு. இதன் மூலம் கொள்முதல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த மருந்துகளுக்கு அதிகத் தேவை இருக்கிறது என்பதைக் கணித்து, விநியோகத்தை மேம்படுத்த பயன்படுத்துகிறது.



ஹெல்த்எட்ஜ் (HealthEdge):


பாரம்பரியமாக இயங்கி வரும் சுயாதீன சில்லறை மருந்தகங்களை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நவீன வணிகங்களாக மாற்றுவதற்கு உதவும் ஒரு தொழில்நுட்ப முயற்சி.

எண்டெரோபிரினுர் திட்டம் (EnteroPreneur Programme) மருந்துகள் விநியோகத்தில் கடைசி மைல் இணைப்பை (Last-Mile Connectivity) மேலும் வலுப்படுத் தவும், நாட்டின் கிராமப்புற மற்றும் சிறுநகரப் பகுதி களில் மருந்து கிடைப்பதை உறுதி செய்யவும் உதவுகிறது. திட்டத்தின் கீழ் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் விநி யோக வல்லுநர்கள் எண்டெரோபிரி னியர்களாக இணைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எண்டெரோ நிறுவனம் தனது விரிவான விநியோக உள்கட்டமைப்பு, பிராண்ட் நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. முதலீடே இல்லாமல் உள்ளூர் அளவில் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதற்கும், மருந்து விநியோக இடைவெளியைக் குறைப்பதற்கும் இத்திட்டம் பெரிதும் உதவுகிறது.


தேசிய விநியோக உள்கட்டமைப்பு


தேசிய அளவில் வலுவான உள் கட்டமைப்பை எண்டெரோ நிறுவனம் நிறுவியுள்ளது. மார்ச் 31, 2026 நிலவரப் படி, இந்நிறுவனத்தின் விநியோகக் கட்டமைப்பு பின்வரும் அளவில் இருந்தது.


கிடங்குகள் (Warehouses):


நாடு முழுவதும் 138 கிடங்குகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இவை சுமார் 6,70,000 சதுர அடிக்கும் அதிக மான பரப்பளவைக் கொண்ட பெரிய உள்கட்டமைப்பு வசதிகள். மருந்துகளின் தரத்தைப் பேண இதில் மேம்பட்ட குளிர்பதன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


புவியியல் பரப்பு:


இந்தியாவின் 19-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 45-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் 475-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்நிறுவனம் தனது சேவையை நேரடியாக வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் சுமார் 3,000-க்கும் மேற் பட்ட மருந்து மற்றும் மருத்துவ சாதன உற்பத்தியாளர்களுடன் இந்நிறுவனம் நேரடி உறவைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் தளம்: நாடு முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சில்லறை மருந்தகங்கள் மற்றும் சுகாதாரப் பயிற்சியாளர்களையும், 2,300-க்கும் மேற்பட்ட மருத்துவமனை களையும் தனது வாடிக்கையாளர் களாகக் கொண்டு இயங்குகிறது.


எண்டெரோ நிறுவனம் தேசிய அளவில் தனது விரிவான கிளைகள் மற்றும் கிடங்குகளை நிர்வகிக்க 4,600-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொமாக 83,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை (Stock Keeping Units) இந்நிறுவனம் கையாண்டு விநியோகம் செய்கிறது.



 
 
 

Comments


bottom of page